Loading. Please wait.

actress,actors gallery

pandavarani meet kamalhassan

நடிகர் சங்கத் தேர்தல் என்றவுடன் ரஜினி சார், கமல் சாரை சந்திக்கும் போது
புத்துணர்ச்சி, உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அதுவொரு நல்ல தொடக்கமாக
இருக்கும். மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கமல் சாரின் ஆதரவோடு தான்
பாண்டவர் அணியாக செயல்படத் தொடங்கினோம். ஜூன் 23-ம் தேதி நடைபெறும்
தேர்தலுக்காக கமல் சாரின் ஆசிர்வாதம் வாங்கினோம். இந்த பாண்டவர் அணி
மீண்டும் தேர்தலில் நிற்கிறது. இன்னும் 6 மாதங்களில் கட்டிடம் முடியும்
தருவாயில் இருக்கிறது. அதற்குள் சின்ன சின்ன விஷயங்களால் எதிரணி ஒன்று
தொடங்கப்பட்டுள்ளது. எங்கள் அணியில் யார் என்ன பதவிக்கு என்பதை
அறிவித்துவிட்டோம். கமல் சாரோட சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது.
நாங்கள் என்ன செய்யவில்லை என்று ராதிகா அம்மா குற்றச்சாட்டு வைத்தார்கள்.
அதற்கான பதில் தான் அந்த வீடியோ. சும்மா ஏவி விடுவதற்கான வீடியோ அல்ல.
அங்கிருக்கும் உண்மைகளில் நாங்கள் செய்த விஷயத்தை காட்டுனோம். தண்டனை
செய்திருந்தால் சட்ட ரீதியாக தண்டனை விதிக்கப்படும் என்று வாக்குறுதி
அளித்திருந்தோம். அதை தான் செய்தோம். என்ன நடந்தது, என்ன செய்தோம் என்பது
தான் அந்த வீடியோ. அதில் தவறில்லை.
பிரிவினை எல்லாம் கிடையாது. கலை நிகழ்ச்சி ஒட்டுமொத்த குடும்பமாக அனைத்து
நடிகர்களும் ஒன்றாக சென்று, இவ்வளவு நிதி திரட்டியிருக்க மாட்டோம்.
ஒட்டுப் போட்டு முடித்தவுடன் அனைவரும் குடும்பமாகத் தான் பழகி வருகிறோம்.
ஆனால், அதில் தேர்தல் என்பது மிகவும் முக்கியம்.

Other film news