“மாயபிம்பம்” பல டைரக்டர்கள் பார்த்து பிரமித்த சினிமா.காதல்,மைனா வரிசையில் மீண்டும்..

“மாயபிம்பம்” பல டைரக்டர்கள் பார்த்து பிரமித்த சினிமா.காதல்,மைனா
வரிசையில் மீண்டும்.. காதலின் வலியை சொல்லும் எதார்த்த படம்
“மாயபிம்பம்”.

ஒவ்வொரு காலகட்டத்திலும் பல இயக்குநர்கள் காதலின் ஆழத்தையும்,
யதார்த்தத்தையும் அச்சு பிசிறாமல் படமாக்கியிருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு 'அலைகள் ஓய்வதில்லை', 'காதல்', 'மைனா' போன்ற பல படங்களை
கூறலாம். அதே வரிசையில் தற்போது உருவாகியுள்ள படம் தான் 'மாயபிம்பம்'.
அறிமுக இயக்குநர் சுரேந்தர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம்
உண்மையான யதார்த்தமான காதலை கூறுகிறது. உண்மையான காதலுக்கு ஜாதி, மதம்,
அந்தஸ்து என்று எந்த தடையும் இருக்காது. அதுபோல, காதலுக்காக எந்த
எல்லைக்கும் செல்லக்கூடிய துணிவு வரும் என்பதையும் நிரூபிக்கும் வகையில்
இப்படம் இருக்கும்.

Other news