யோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது.

யோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது. 

 பல படங்களில் இடைவிடாமல் நடித்து வருகிறார் யோகி பாபு. அதில் ஒன்றுதான் 'ஜாம்பி'. இப்படத்தில் ஆன்லைன் பிரபலங்களும் யூடியூப்  பிரபலங்களும் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் பின்னணி கதை, ஒரு விடுதியில் இரவு நேரத்தில் நடக்கும் சம்பவத்தை சுற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த், கோபி சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்புதாசன், 'பிஜிலி' ரமேஷ், ஜான் விஜய், 'லொள்ளு சபா' மனோகர், சித்ரா அக்கா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
ஒரு  பாடல் தவிர படத்தின் படப்பிடிப்பு அனத்தும் முடிவடைந்தது. படத்தின் பெரும் பகுதியை ஈசிஆரில் உள்ள விடுதியைச் சுற்றி எடுக்கப்பட்டு வருகிறது. பிரேம்ஜி அமரன் இசையில், புவன் நல்லான்.ஆர். இயக்கத்தில் உருவாகும் இப்படம் கோடையின் மத்தியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் கதை சென்னை பாண்டிச்சேரி ஈசிஆர் சாலையில் ஒரே இரவில் நடக்கும் சம்பவத்தின் அடிப்படையில் படமாக்கப்பட்டு வருகிறது. S3 பிக்சர்ஸ் சார்பில் ஆர்.வசந்த் மகாலிங்கமும், வி.முத்துக்குமாரும் படத்தை தயாரிக்கிறார்கள்.
It’s farewell for Yogi Babu from ‘Zombie’ sets 

Yogi Babu has been unceasingly working in many projects and one among them is Zombie, which has a star-cast comprising of almost all the famous online and YouTube personalities. The film revolves around a drama that happens in the span of a night time in the backdrops of a resort. The film has an ensemble star-cast involving yogi Babu, Yashika Anand, Gopi , Sudhakar , T.M. Karthik , Manobala, Anbudasan, Bijili Ramesh, John Vijay , Lollu Sabha Manohar, Chitra Akka and few others. 

Yogi Babu has now completed shooting his portions, which almost wraps up the entire project except for a song that is pending to be completed. Major portions of the film are being shot across the resorts in the ECR. The film is schedule for release by the mid of this summer and has Premgi Amaran composing music with Bhuvan Nullan R directing it.

The film’s story takes place during a single  night against the backdrops of Chennai-Pondicherry ECR road. With the shooting close on the heels of completion, the ‘Zombie’ team is keen on releasing the movie for this summer. Premgi Amaran is composing music for this film, which is directed by Bhuvan Nullan R . Vasanth Mahalingam and V. Muthukumar are producing “ZOMBIE” for Production House - S3 Pictures.

Other news