நம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடிய .விஐபிக்கள்!

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், விவசாயம் பற்றிய விழிப்புணர்வு
ஏற்படுத்தவும் ,தவறான பிளாஸ்டிக் பிரயோகத்தைத் தடுக்கவும், நீர் வளம்
பாதுகாக்கவும்   ,சென்னையைச் சுத்தமாக்கவும்  ,சுற்றுச்சூழல் நகரமாக
உருவாக்கவும் மாணவர்களிடம் இவை சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும்
'நம்ம சென்னை' என்கிற தன்னார்வலர் அமைப்பு 'இயற்கையோடு இணைவோம்' என்கிற
ஒரு முன்னெடுப்பை நடத்தியது.

சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ஆம் தேதி டாக்டர் ராஜலட்சுமி மோகன், அருணா
ராஜ் மற்றும் திருமதி அனிதா ராஜலட்சுமி, அவர்கள் தலைமையிலும் இந்த
முன்னெடுப்பு நடத்தப்பட்டது..

நமக்கு எல்லாமும் கொடுத்த இந்த சென்னை மாநகரத்திற்கு நாம் என்ன
கொடுத்திருக்கிறோம் ?

வெறும் குப்பைகளும் கழிவுகளும் மாசுகளும் மட்டும்தானா ?யோசிக்க வேண்டாமா?
எதிர்காலத்  தலைமுறையினருக்கு நம்ம சென்னையை இப்படியேதான் நாம் விட்டுச்
செல்ல வேண்டுமா?

 வருங்காலத் தலைமுறைக்கு நாம் படிப்பு, வசதி, கார் வீடு என்று கொடுத்தால்
மட்டும் போதுமா?
ஆரோக்கியத்தைக் கொடுக்க வேண்டாமா ?

நம்ம சென்னையைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் சுற்றுச்சூழல் வளம் கொண்ட
நகரமாக மாற்றும் முயற்சிக்கான தொடக்கமே இந்த 'இயற்கையோடு இணைவோம்'
இயக்கம்.

Other news